சைவப்புலவர் செ.நவநீதகுமார்- ஆசிரியர் சைவநீதி அவர்களின் வாழ்த்துச்செய்தி

“பத்தி வலையிற் படுவோன் காண்க”
(திருவாசகம்)

தொன்மையான எமது சமய உண்மைகளைத் தத்துவங்களைப் பன்னெடும் காலமாக பல வழிகளிலே பரப்பிவருகிறார்கள். சொற்பொழிவு மூலமும் பிரசுரம் மூலமும் இப்பணி தொடருகிறது.

அச்சு ஊடாக வாசிப்பு அருகிவரும் இக்காலத்தில் இணைய தளப்பாவனை அதிகரித்து வருகிறது.காலத்தோடு ஒட்டிக் கரும மாற்றுவதே பயன் மிக்கது எனக்கருதி “பக்தி” என்ற இணையதள இதழ் வெளிவருகிறது.

இம் முயற்சியிலே செயற்படும் இளைஞர் குழுவினரைப் பாராட்டி இறை அருளால் “பக்தி” மென்மேலும் மணம் வீசி வெளிவரப் பிரார்த்திக்கின்றேன்.

-செல்லையா நவநீதகுமார்-