தென் கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் அவர்களின் ஆசிச்செய்தி

ஒன்றாம் பரம்பொருள் தன்னை விரித்து தானே யாவுமாய் விரிந்து அண்டமாய் கண்டமாய் கடலாய் நதியாய் மரமாய் மிருகமாய் மானுடமாயாகி தன்னில் தானாய் தானே யாவுமாய் ஆடும் விளையாடல் உயிரின் உயர் பிறப்பாம் மனிதன் தன் சிந்தைத் தெளிவில் இறை கண்டான் அந்த இறை பொருள் சிவம் அதுவே சக்தி. அச்சிவப் பரம் பொருள் முழு முதற் தெய்வமாய் கண்டு வழிபடும் பெரும் பேறு பெற்றவர்கள் நாம்.

நம் முன்னோர்கள் எங்கும் எதிலும் இறைவனை கண்டார்கள் கலை கண்டார்கள் பண்பாடு கண்டார்கள் கலையும் பண்பாடும் இறையொடு பினைந்து அவனொடு கலந்து மன‌த்தை உயர்த்தின‌. கால சுழற்சியில் அன்பே சிவமாய் கண்ட மனிதம் வேற்றுப் பாதையில் சுற்றி சுழல்கிறது. பற்பல மயக்கம் மனதில் புகுந்தன. யாவும் தொலைந்த நிலையில் இன்னமும் தொலைக்கும் நிலையில் செல்லும் மானிடத்தை தடுத்து சிந்திக்க வைக்கும் செயலின் ஆரம்பமாய் பக்தி இணையம் ஆரம்பிக்கப்படுவதையிட்டு தென்கயிலை ஆதீனமும் அகில இலங்கை சைவ மகா சபையும் மகிழ்வு கொள்கிறது.

தம் கடன் இறைபனி செய்து கிடப்பதே என்ற தூய மனத்துடன் ஆரம்பமாகும் பக்தி இணையம் தன் பணியை மிகச்சிறப்புடன் மேற்கொள்ள எம்பெருமானை வேண்டுகிறோம். உங்களை நன்றாக இறைவன் படைத்தது தன் பணி சிறப்பாக செய்வதற்கே என நம்புகிறாம். தொடரட்டும் தங்கள் நற் பக்தி பணி.

தவத்திரு அகத்தியர் அடிகளார்,
தென் கயிலை ஆதீனம்.