சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் ஜாக்ரத சைதன்யா அவர்களின் ஆசிச்செய்தி

சின்மயா மிஷன்,
இல, 09 செட்டித்தெரு ஒழுங்கை,
ஆசிச் செய்தி நல்லூர்.
20.09.2017.

உலகளாவிய ரீதியில் மக்களிடையே, குறிப்பாக இளஞ் சந்ததியினரிடையே வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகின்றது. பல வகையான இலத்திரனியல் சாதனங்கள், இணையத் தளங்கள் எனப் பல் வகையான ஊடகங்கள் மூலம் செய்திப் பரிமாற்றம் நடைபெறுகின்றது. இந்நிலையில் பக்தி இலக்கியங்கள் மற்றும் ஆன்மீகம் சம்பந்தமான விடயங்களையும் இவ் ஊடகங்களுடாக வெளிக் கொணர்வது அவசியமானதாகும். ஆந்த வகையில் “pakthi.com” என்ற இணையத்தளம் ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

இவ் இணைய பக்கத்தின் மூலம் இந்து சமய தத்துவங்கள், சாஸத்திரங்கள், விழுமியங்கள், புனித நூல்கள், பற்றிய விளக்கங்கள், இந்து கலாசாரம் சார்ந்த விடயங்கள், ஞானிகள்,மகான்கள் பற்றிய வரலாறுகள், நாயன்மார்களின் வரலாறுகள், ஆலயங்கள் மற்றும் சமய நிறுவனங்களின் செயற்பாடுகள், பெரியார்களின் சொற்பொழிவுகள், சிந்தனைகள், கட்டுரைகள், நாடகங்கள் இவற்றை வெளிக் கொணர்வதன் மூலம் இளம் சந்ததியினரிடையே ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கின்றோம்.

இவ்வாறு இவ் இணையப் பக்கம் சிறந்த முறையில் செயல்பட்டு எமது மக்களிடையே சிறந்த ஆன்மீக விழிப்புணர்வை உருவாக்கி நல்லதோர் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த ஆசி வேண்டி எல்லாம் வல்ல பரம் பொருளையும், பூஜ்ய குருதேவர் சுவாமி சின்மயானந்தர் அவர்களையும் பிரார்த்திக்கின்றோம்.

இந்துவாக வாழ்வோம்

இறை பணியில்,

பிரம்மச்சாரி ஜாக்ரத சைதன்யா,
வதிவிட ஆச்சாரியார்,
சின்மயா மிஷன்,
யாழ்ப்பாணம்.